ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு தபு படத்திற்கு வக்கீல் நோட்டீஸ்

Bookmark and Share

ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு தபு படத்திற்கு வக்கீல் நோட்டீஸ்

தபு நடித்த படத்துக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு இஸ்லாமிய மதகுரு (இமாம்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தமிழில் சிறைச்சாலை, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை தபு.

இந்தியில் வெளியான ‘ஹைதர்'  படத்தில் சாஹித் கபூருடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்துக்காக ஸ்ரீநகரில் உள்ள மசூதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது தபுக்கு அங்குள்ள இமாம் திருமணம் நடத்தி வைப்பதுபோல் காட்சி படமாக்கப்பட்டது.

இப்படம் வெளியாகி 4 மாதங்கள் ஆகிறது. தற்போது பட இயக்குனர் விஷால் பரத்வாஜ் மற்றும் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு கேட்டு மத குரு குலாம் ஹசன் ஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

தபுக்கு திருமணம் நடத்தும் காட்சியை படமாக்குவதுபற்றி என்னிடம் பேசிய பட குழுவினர் அக்காட்சியை கல்வி தொடர்பாக பயன்படுத்தப்போவதாக கூறியதுடன் என்னையும் இணைத்து படமாக்கினார்கள்.

ஆனால் படத்தில் அக்காட்சியை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். கல்வி தொடர்பாக அக்காட்சி படமாக்கப்படவில்லை. வர்த்தக ரீதியாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

இதனால் எனது வேலை பறிபோனதுடன் சக உறுப்பினர்கள் மத்தியில் கவுரவத்தை குறைக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இதற்கு நஷ்ட ஈடாக ரூ.50 லட்சம் தர வேண்டும் அல்லது பத்திரிகையில் மன்னிப்பு விளம்பரம் தரவேண்டும் என கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions