தரமணி ஷூட்டிங் - இன்னும் 7 நாட்கள் மட்டுமே பாக்கி

Bookmark and Share

தரமணி ஷூட்டிங் - இன்னும் 7 நாட்கள் மட்டுமே பாக்கி

'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் ’தங்க மீன்கள்’. கடந்தாண்டு இப்படம் தேசிய விருது பெற்றது.

இந்நிலையில் தங்கமீன்கள் படத்திற்கு பிறகு ’தரமணி’ என்ற படத்தை துவக்கினார் ராம். ஐடி துறையில் நடக்கும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

புதுமுகம் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்க, ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். இதுவரை இப்படம் தொடர்பாக ஒரே ஒரு ஸ்டில் மட்டுமே வெளியாகியுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்புகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் 7 நாட்கள் மட்டுமே தரமணி படத்தின் ஷூட்டிங் பாக்கி உள்ளதாம். இந்த 7 நாட்கள் படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே நடைபெற இருக்கிறது. அங்கு படப்பிடிப்புகள் முடிந்தவுடன் போஸ்ட் புரொடாக்ஷன்ஸ் வேலைகள் துவங்குகின்றன.

விரைவில் படத்தின் இசையையும், அதனைத்தொடர்ந்து, படமும் ரிலீஸாக இருக்கிறது. தரமணி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜே.எஸ்.கே.பிலிம் கார்பரேஷன் சார்பில் சதீஷ் தயாரிக்கிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions