மீண்டும் இயக்குனர் தேஜா

Bookmark and Share

மீண்டும் இயக்குனர் தேஜா

டோலிவுட்டில் புதுமையான வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களில் தேஜாவுக்கு தனி இடமே உண்டு. பொழுதுபோக்கு படங்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர். ஒரு புதிய டிரன்டையே உருவாக்கியர்.

அவரது படங்களில் அறிமுகமாகி பலர் பிரபலம் அடைந்தது நினைவிருக்கலாம். பிரின்ஸ் மகேஷ் பாபுவை வைத்து நிஜம் என்ற படத்தை எடுத்தார். அது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு அவருக்கு சற்று இறங்கு முகம் என்று தான் கூற வேண்டும். அவர் சமீபகாலமாக புதிய திரைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அவர் தற்போது முற்றிலும் புதுமையான கதைகளத்துடன் கூடிய படத்தை எடுக்க இருக்கிறார்  என்று செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் தற்போது புது எனர்ஜியுடன் ஹோரா ஹோரி என்ற படத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்.

முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் நினைத்தால் பெரிய ஹீரோவை வைத்து புதிய படத்தை தொடங்கி இருக்க முடியும்.

ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதற்கு புது முகங்களில் இருந்து தான் அவர் எதிர்பார்க்கும் முழுமையான நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வர முடியும் என்று நினைப்பதாக தெரிகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்
உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்
ராம் சரண் மறுத்த படத்தில் மகேஷ் பாபு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions