ஹீரோக்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைப்பதால் பாதிக்கப்படும் தமிழ் ஹீரோயின்கள்!!

Bookmark and Share

ஹீரோக்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைப்பதால் பாதிக்கப்படும் தமிழ் ஹீரோயின்கள்!!

தமிழ் நாட்டில் தியேட்டர்கள் எண்ணிக்கை குறைவது, பைரஸி, திருட்டு டிவிடி போன்ற பிரச்னைகளால் தமிழ் சினிமா தள்ளாடுகிறது. 

அதிலும் பெரிய படங்கள் நிலை ரொம்ப மோசம். சமீபத்தில் வந்த படங்களில் மாநகரம், துருவங்கள் பதினாறு போல சின்ன பட்ஜெட் படங்கள்தான் லபாம் பார்த்துள்ளன. 
பெரிய பில்டப்புகள் தரப்பட்ட சிங்கம் 3 க்கே தமிழில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்று அந்தப் படத் தயாரிப்பாளரே ஒப்புக்கொண்டுள்ளார்.

பெரிய ஹீரோக்கள் இது இல்லைனா இன்னொண்ணு என்ற ஃபார்முலாவில் தமிழை விட தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ் ஹீரோயின்கள்தான். தெலுங்கில் மார்க்கெட் இருக்கும் நடிகைகளான ரகுல்ப்ரீத் சிங், ரெஜினா போன்றோரை ஜோடியாக்க ஆசைப்படுகிறார்கள். ரகுலும் ரெஜினாவும் இங்கிருந்து போனவர்கள்தான். அனுஷ்காவுக்கும் இதே போல மவுசு உள்ளது. தமன்னா, காஜல் அகர்வால் போன்ற இரு மொழிகளுக்கும் தெரிந்த ஹீரோயின்கள் பிஸியாக இருப்பதற்கும் இதுதான் காரணம்.

இதனால் இப்போது ஹீரோயின்களும் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க வந்த வாய்ப்பைக் கூட நழுவ விட்டுவிட்டு தெலுங்கில் தனக்கு மார்க்கெட் உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

தமிழில் மட்டுமே கவனம் செலுத்தும், தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த நடிகைகளை பெரிய ஹீரோக்கள் சீண்டுவதே இல்லை.


Post your comment





Related News
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
தெலுங்கு ரசிகர்களையும் தெறிக்க விட வைத்த தளபதி விஜய் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
ஒரே வாரத்தில் ரசிகர்களை மீண்டும் மெர்சலாக்க போகும் தளபதி - விஷயம் என்ன?
திடீரென தள்ளி போன மெர்சல் ரிலீஸ் - சோகத்தில் உறைந்த ரசிகர்கள்.!
விஜய்யின் வெற்றி படம் தெலுங்கில் டப் ஆகிறது- அது என்ன படம் தெரியுமா?
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
கத்தி தெலுங்கு ரீமேக் எந்த நிலையில் உள்ளது?
தெலுங்கு பிரேமம் படத்தால் அதிக லாபம் யாருக்கு?
நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்
சொந்தக் குரலில் தெலுங்கு டப்பிங் பேசிய கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions