விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு

Bookmark and Share

விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு

தமிழ் சினிமாவில் ரிலீஸ் தேதி பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே சமயத்தில் பல படங்கள் திரைக்கு வருவதால் அதிக வசூல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தயாரிப்பாளர் சங்கம் ரிலீஸ் தேதியை நெறிப்படுத்த ஒரு குழுவினை அமைத்தது.

ஆனால் அப்போதும் ரிலீஸ் தேதி ஒதுக்குவது, அதை பின்பற்றுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால் நடிகர் ஆர்.கே.சுரேஷ், உதயா போன்றவர்கள் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதாவது அடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

இதனால் பல படங்கள் ஒரே நாளில் வெளிவருவது உறுதியாகியுள்ளது. இது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தகவல் தான் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு இதனால் வசூலில் அதிகம் பாதிப்பு இருக்கும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions