தாக்க தாக்க படத்திற்கு விஜய் உதவி!

Bookmark and Share

தாக்க தாக்க படத்திற்கு விஜய் உதவி!

இலவச திருமணம், கல்வி உதவித் தொகை என பலவிதத்திலும்  தனது ரசிகர் மன்றங்கள் மூலம்  உதவிகள் செய்து வருபவர் விஜய். தற்போது சினிமாத் துறைக்குள்ளும் தொடர்கிறது.

அந்த வகையில் சிம்பு நடித்த வாலு படம் வெளிவருவதற்கு பல சிக்கல்களை தீர்த்து வெளிவர உதவி புரிந்தவர் விஜய். அதோடு, வாலு படத்திலும் விஜய்க்கு நன்றி தெரிவித்து கார்டு போட்டிருந்தார் சிம்பு.

விஜய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று வாலு படத்துக்கு நல்லதொரு வரவேற்பை ஏற்படுத்திக்கொடுத்தனர். அதேபோன்று தனது சித்தி மகனான விக்ராந்தின் தாக்க தாக்க படத்திற்கும் உதவி செய்திருக்கிறார் விஜய். வியாபாரம் ஆகாமல் இருந்த அந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணுவிடம் சொல்லி வெளியிடுவதற்கு ஆவன செய்திருக்கிறார்.

தாக்க தாக்க படத்திலும் விஜய்க்கு நன்றி கார்டு போட்டுள்ளார் விக்ராந்த். அது மட்டுமின்றி, இந்த படத்தில் விக்ராந்தின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாகவும் விஜய் கருத்து கூறியுள்ளார். அதனால் இந்த படத்திற்கும் விஜய் ரசிகர்கள் நல்லதொரு  வரவேற்பை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார் விக்ராந்த்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions