என் நடிப்பு நினைவில் நிற்க வேண்டும் : தபு

Bookmark and Share

என் நடிப்பு நினைவில் நிற்க வேண்டும் : தபு

நான் நடிக்கும் படங்களில், எனது நடிப்பு, மக்களுக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் வகையிலான கேரக்டர்களிலேயே நடிக்க தனக்கு விருப்பம் என்று நடிகை தபு கூறியுள்ளார்.

நிஷாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷ்யம் படத்தில், தபு, போலீஸ் உயர் அதிகாரி மீரா தேஷ்முக் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த கேரக்டர் குறித்து, தபு கூறியதாவது, த்ரிஷ்யம் படத்தில் தனது கேரக்டர், ஆண் நடிகர்களால் எளிதாக செய்துவிடமுடியும், ஆனால், அந்த கேரக்டர் பெண்களுக்கு அவ்வளவு எளிதானதல்ல.

படத்தின் வசனகர்த்தா, அந்த கேரக்டரை, பெண்ணை முன்னிலைப்படுத்தி வசனம் எழுதியுள்ளார். அந்த கேரக்டரில் தான் நடித்திருப்பது தான் செய்த பாக்கியமே. இந்த கேரக்டரில் தனது நடிப்பு தற்போது மட்டுமல்லாது, நீண்ட காலங்கள் அளவிற்கும் பேசப்படும் என்று தபு கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions