காதலனை தேடி அலையும் காதலியின் கதை

Bookmark and Share

காதலனை தேடி அலையும் காதலியின் கதை

தொலைந்த காதலியை தேடி அலையும் காதலன்கள் பற்றிய சினிமா நிறைய வந்து விட்டது. தொலைந்த காதலனை தேடி அலையும் ஒரு பெண்ணின் கதையாக உருவாகி வருகிறது தகவல் என்ற படம். மலையாள இயக்குனர்கள் பரதன், ஜோஷியிடம் உதவியாளராக இருந்த சசீந்திரா இயக்கி உள்ளார். தேஷா, ரிஷி, டிம்பிள் ரோஸ், ஸ்ரீஷா என்ற புதுமுகங்களுடன் மயில்சாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிபி ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாஜித் தென்றல் இசை அமைக்கிறார்.

"பெண்ணைத் தெய்வமாக, நதியாக, தாய் மொழியாக, தாய்நாடாக மதிக்கிற இந்த நாட்டில் இப்போது பெண்ணை காமக் கருவியாகப் போகப் பொருளாகப் பார்க்கும் சூழல் உள்ளது. ஒரு பெண் தனியே பயணம் செய்கிறபோது அவளை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது அதனால் அவள் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறாள் என்பதைப் பற்றிய கதை. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு சூழலில் கிடைக்கும் தகவல் அவனது வாழ்க்கையையே மாற்றியமைக்கும். அப்படி இப்படத்தில் வரும் ஒரு தகவல் தான் படத்தின் திருப்புமுனை, விறுவிறுப்புக்கு மையப்புள்ளி எல்லாமே.

காணாமல் போன காதலனைத் தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் பாதையும், பயணமுமே கதையின் உட்கரு. கதைப் பயணிக்கும் மதுரை, கம்பம், தேனி, கள்ளக்குறிச்சி, ஒத்தப்பபாலம், மகாகனித் தோட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்" என்றார் இயக்குனர் சசீந்திரா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions