‘தல 56′ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு, உற்சாகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

‘தல 56′ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு, உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜீத், சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் படத்தில் ஸ்ருதிஹாசன் அஜித்திற்கு ஜோடியாகவும் லட்சுமிமேனன் அஜித்திற்கு தங்கையாகவும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் காமெடியில் கலக்க சூரி உள்ளார், படத்தில் இவருக்கும் ஜோடி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் தல-56 படத்தில் ‘நானும் நடிக்கின்றேன், மகிழ்ச்சி’ என வித்யூலேகா டுவிட் செய்துள்ளார்.

இப்படத்தின் டைட்டில் சுதந்திர தின விழா ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களால் அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில் இந்த வார இறுதியில் ‘தல 56′ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது.

எனினும் படக்குழுவினர் சார்பில் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் அஜீத் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 17 ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் எம்.ரத்தினம் ஆதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions