'தல 56' எப்போது ஆரம்பம்...?

Bookmark and Share

'தல 56' எப்போது ஆரம்பம்...?

அஜித் நடித்து சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தையடுத்து மீண்டும் 'வீரம்' இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 'என்னை அறிந்தால்' வெளியானதும் பிப்ரவரி மாதக் கடைசியில் ஆரம்பமாகும் என்று முன்னர் சொல்லப்பட்டது. ஆனால், படப்பிடிப்பை தற்போது ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்களாம்.

அஜித், கர்ப்பமாக இருக்கும் மனைவி ஷாலினியின் அருகிலேயே இருந்து அவரைக் கவனித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறாராம். அடுத்த மாதம் குழந்தை பிறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தனது மனைவியின் மீதும், மகள் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருக்கும் அஜித் இரண்டாவது குழந்தை பிறப்பின் போதும் மனைவியின் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

அதனால்தான் படப்பிடிப்பைக் கூட ஒரு மாதம் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என தயாரிப்புத் தரப்பிலும் தெரிவித்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.மேலும், படத்திற்கு இன்னும் நாயகி யார் என்பதும், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் வேலையும் ஒரு பக்கம் நடந்து வருகிறதாம்.

அந்த வேலைகள் முடிவதற்கும் அஜித் படப்பிடிப்பில் வந்து கலந்து கொள்வதற்கும் சரியாக இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே சமந்தா, ஹன்சிகா ஆகியோர் அஜித் ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளது என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, பிந்து மாதவி ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.

பிந்து மாதவியும் பல பேட்டிகளில் அஜித்துடன் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இருந்தாலும் இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் 'தல 56' பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions