பரப்பரப்பான வியாபாரத்துடன் நவம்பர் 5 ஆம் தேதி தல 56!

Bookmark and Share

பரப்பரப்பான வியாபாரத்துடன் நவம்பர் 5 ஆம் தேதி தல 56!

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 56 இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது. இப்படத்துக்கு பெயர் சூட்டவில்லையே தவிர படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் உருவாகிவிட்டன அடுத்த மாதம் ஆடியோ வெளியீடு நடைபெற இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் படத்தின் பிசினஸை ஏறக்குறைய முடித்து விட்டார். சென்னை ஏரியாவை லதீஃப் புரெடாக்ஷன் என்ற நிறுவனம் வாங்கி இருக்கிறதாம். செங்கல்பட்டு ஏரியாவின் வெளியீட்டு உரிமையை எம்.கே. என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

மதுரை, கோவை, சேலம் திருநெல்வேலி-கன்னியாகுமரி, திருச்சி- தஞ்சாவூர், ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமையை சுஸ்மா சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து வாங்கி உள்ளதாம்.

தல 56 படத்தை வாங்கிய நிறுவனங்கள்தான் ஏ.எம்.ரத்னத்திடமிருந்து என்னை அறிந்தால் படத்தின் விநியோக உரிமையையும் வாங்கியதாம்.  பாண்டிச்சேரி, வடஆற்காடு, தென்ஆற்காடு ஆகிய பெரிய ஏரியாக்களின் விநியோக உரிமையை சண்முகா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாண்டிச்சேரி சுரேஷ் என்பவர் வாங்கி உள்ளார். 

தல 56 படத்தின் ஏரியா வியாபாரம் அனைத்தும் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் வெளி மாநில, வெளிநாடு விநியோக உரிமைகளின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 ஆம் தேதி அன்று தல 56 படத்தை வெளியிட உள்ளனர்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions