'தல 56' படம் தீபாவளி வெளியீடு...!

Bookmark and Share

'தல 56' படம் தீபாவளி வெளியீடு...!

சிவா இயக்கத்தில் அனிருத் இசையைமப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகிறது. இதற்காக பின்னி மில்லில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் அஜித், லட்சுமி மேனன் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்கள்.

'என்னை அறிந்தால்' படம் வெளியான உடனேயே அஜித் அடுத்த பட வேலைகளில் இறங்கி விட்டார். தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் படப்பிடிப்பு உடனடியாக ஆரம்பிப்பதை அவர் தள்ளி வைக்கச் சொன்னார்.

குழந்தை பிறக்கும் போது மனைவி ஷாலினியுடன் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டார். குழந்தை பிறந்து பெயர் சூட்டும் நடந்த பிறகுதான் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

அனைத்தும் முடிந்து இப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துள்ளார். இடையில் இயக்குனர் சிவாவுடன் படத்திற்கான விவாதத்திலும் கூட அஜித் கலந்து கொண்டார் என்கிறார்கள்.

'என்னை அறிந்தால்' படம் வெற்றிப் படம்தான் என்றாலும் இன்னும் அதிகமான வெற்றியை எதிர்பார்த்துள்ளார்கள். தொடர்ந்து 'ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால்' ஆகியவை சுமாரான வெற்றியை மட்டுமே பெற்று வருவதால் அடுத்த படத்தை சூப்பர் வெற்றியாக ஆக்க வேண்டும் என்று அஜித் சொல்லியுள்ளாராம். இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions