முழுக்க முழுக்க நகரத்து பின்னணியில் 'தல 56'

Bookmark and Share

முழுக்க முழுக்க நகரத்து பின்னணியில் 'தல 56'

'வீரம்' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அஜித் நடிக்கும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இந்த மாத ஆரம்பத்தில் துவங்கியது. ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்கிறார் லக்ஷ்மிமேனன்.

அஜித், லக்ஷ்மிமேனன் சம்பந்தப்பட்ட  காட்சிகள் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படமாக்கப்பட்டது. அஜித்தின் தங்கையாக நடிக்கும் லக்ஷ்மிமேனன் கல்லூரிக்குச் செல்வதுபோலவும், அவருக்கு துணையாக அஜித் செல்வதுபோன்ற போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின.

சில தினங்களே படப்பிடிப்பு நடைபெற்றநிலையில்  'தல 56' படத்திற்கான முதல் ஷெட்யூல் தற்போது முடிவடைந்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை அஜித்துடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாத படத்தின்  ஹீரோயின் ஸ்ருதிஹாசன், இந்த 2வது ஷெட்யூலில் கலந்து கொள்ள இருப்பதாகவும், லக்ஷ்மிமேனன் நடிக்கும் காட்சிகள் ஜூன் 2வது வாரத்தில் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

'வீரம்' படத்தை முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் எடுத்த சிவா, அஜித்தின் 56வது படத்தை முழுக்க முழுக்க நகரத்து பின்னணியில் எடுக்கிறாராம். இப்படத்தின் இடம்பெறும் ஃப்ளாஷ்பேக் காட்சி கோல்கட்டாவில் நடப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அதற்காக சென்னையிலேயே செட் அமைத்து படம்பிடிக்க இருக்கின்றனர். அவுட்டோர் காட்சிகளுக்காக மட்டும் கோல்கட்டா சென்று படம்பிடிக்க இருப்பதாகவும் 'தல 56' படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions