தல அஜித்தின் ப்ளஸும், மைனஸும்- ரசிகர்களின் பார்வையில்

Bookmark and Share

தல அஜித்தின் ப்ளஸும், மைனஸும்- ரசிகர்களின் பார்வையில்

அஜித் என்ற ஒரு சொல் பல லட்ச்சக்கணக்கான ரசிகர்களின் மந்திரமாக உள்ளது. பேருக்குள்ளே காந்தம் உண்டு என்ற வரிகள் ரஜினிக்கு பிறகு அஜித்திற்கும் பொருந்தும்.

வெளியே காட்டத முகம், விளம்பரமே இல்லாமல் படம் வெளியிடு இருந்தாலும், ஓப்பனிங் என்பது அஜித் படங்களுக்கு என்றுமே படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே போகின்றது.

வெற்றி தோல்வி என்பதை தாண்டி அஜித்தின் பலமாக ரசிகர்கள் பார்வையில் பார்த்தால், அவரின் குட் இமேஜ் தான், ஸ்கிரீனுக்கு வெளியே அஜித்திற்கு நடிக்க தெரியாது.

தன் சொந்த சுயலாபத்திற்காக எப்போதும் ரசிகர்களை பயன்படுத்திக்கொள்ளாதவர், தனக்காக பால் அபிஷேகம் செய்து அடிப்பட்ட ரசிகனிடம் கூட, ‘நான் சம்பாதிக்கிறேன், படம் நடிக்கின்றேன், நீ படத்தை பார்ப்பதோடு நிறுத்திக்கொள், எனக்காக உன் வாழ்க்கையை வீணாக்காதே’ என கூறி வந்தவர்.

அதுமட்டுமின்றி மற்றவர்களுக்கு உதவும் குணம், படப்பிடிப்பில் எல்லோரையும் ஒரேவிதமாக நடத்துவது என இவரின் ஆப் ஸ்கிரீன் இமேஜிற்கு தான் அதிக ரசிகர்கள்.

மேலும், அஜித் பைக் பிரியர் என்பதால், இயல்பாகவே இளைஞர்களுக்கு பைக் மோகம், இதுவும் கூட ஒரு வகையில் அஜித்தை பிடிக்க காரணம், விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும் இது உண்மை.

இதுபோன்ற பல காரணங்கள் அஜித் பல தோல்வி கொடுத்தும் ரசிகர்கள் அதிகமாகிக்கொண்டே போவதற்கு ஒரு சான்று.

அதே நேரத்தில் அஜித்தின் பலவீனமும் அவருடைய ரசிகர்கள் தான், அஜித் மீது கொண்ட மிகுந்த அன்பால், அவர் ஸ்கிரீனில் வந்து நின்றாலே போதும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள்.

அதன் காரணமாக என்னவோ அஜித் பல வருடங்களாக புதிய முயற்சிகள் எதுவே எடுக்கவில்லை, என்ன தான் என்னை அறிந்தால் வந்தாலும் ரசிகர்கள் வீரம், வேதாளத்தை தான் தலையில் தூக்கி கொண்டாடுகின்றார்கள்.

அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் தற்போதுள்ள கார்த்திக் சுப்புராஜ், நலன் என இளைஞர்களுடன் கைக்கோர்க்கவேண்டும், அல்லது எல்லோரும் விரும்பும் ஷங்கர், முருகதாஸ், மணிரத்னம், கே,வி.ஆனந்த் என முன்னணி இயக்குனர்களுடன் கைக்கோர்க்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.

ஆனால், அவரோ தனக்கென்று ஒரு வட்டம் போட்டு அதிலேயே இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சுற்றி வருகின்றார், அஜித்தை பழைய லுக்கில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.

அவரோ இன்னும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே வந்து செல்வது கொஞ்சம் ஏமாற்றமாக உள்ளது, தல ரசிகர்களால் தான் நீங்க, கொஞ்சம் ரசிகர்கள் மனதையும் படியுங்கள். Happy Birthday Thala


Post your comment





Related News
இதுவரை யாரும் பார்க்காத தளபதி விஜயின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் - போட்டோ உள்ளே.!
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!
விஜயை அடுத்து சிவகார்த்தியேன் படத்தை வாங்கிய தேனாண்டாள் - குஷியில் ரசிகர்கள்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
அஜித்திற்காக BGM அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்.!
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions