`விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா

Bookmark and Share

`விஸ்வாசம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்து மனம்திறந்த சிவா

நடிகர் அஜித் நடித்த `வீரம்', `வேதாளம்', `விவேகம்' படங்களை இயக்கிய டைரக்டர் சிவா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோவில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், சுவாமிமலை சுவாமிநாத கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில், பாபநாசம் ராமநாத சுவாமி கோவில் ஆகியவற்றுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களை குடும்பத்துடன் தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் வெற்றி என்பது கடவுளின் அருளால் கிடைக்கிறது. நான் தொடர்ந்து ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தி வருகிறேன். நான் ஏற்கனவே `சிறுத்தை', `வீரம்', `வேதாளம்', `விவேகம்' ஆகிய தமிழ் படங்களையும், தெலுங்கில் ஒரு படமும் இயக்கியுள்ளேன்.

தற்போது மீண்டும் அஜித்குமார் நடிக்கும் `விஸ்வாசம்' என்ற படத்தை இயக்குகிறேன். இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. அடுத்த வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும். இப்படம் ஜனரஞ்சகமான குடும்பப் படமாக இருக்கும்.

இப்படத்தில் அஜித்குமாரின் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி, சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இவ்வாறு டைரக்டர் சிவா கூறினார்.

 


Post your comment





Related News
ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் இது இல்லை, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த படக்குழு.!
அஜித் மற்றும் விஸ்வாசத்திற்காக இதை செய்வாரா நயன்தாரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
அஜித்தின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் நடிகை - யார் தெரியுமா?
அஜித் தான் அடுத்த முதல்வர், தமிழகத்தில் இப்படி தான் நடக்கும் - குண்டை தூக்கி போட்ட பிரபலம்.!
அஜித் ஒன்னும் அப்படியான மனிதர் இல்லை - பிரபல நடிகர் அதிரடி தகவல்.!
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!
விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions