அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!

Bookmark and Share

அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!

தல அஜித்தின் விவேகம் படத்தை அடுத்து தற்போது மீண்டும் 4-வது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது.

சிவா - அஜித் கூட்டணி உறுதியான பின்பு படத்தின் டைட்டில் என்ன வைக்கலாம் என்ற ஆலோசனை நடந்துள்ளது, வீரம்-2 வைக்கலாம் என முதலில் முடிவெடுத்து உள்ளனர்.

ஆனால் வீரம் பட தயாரிப்பு நிறுவனம் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வி என்ற எழுத்தில் அஜித் பயன்படுத்தும் வார்த்தையான விஸ்வாசத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

 மேலும் விவேகம் படத்தால் சிறு நஷ்டம் ஏற்பட்டதால் என்னுடைய அடுத்த படத்தையும் உங்களுக்கே தரேன் என கூறி தயாரிப்பு நிறுவனத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்துள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions