இந்தாண்டு 'தல' தீபாவளி தான்!

Bookmark and Share

இந்தாண்டு 'தல' தீபாவளி தான்!

சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கவுள்ள 'தல-56' படம் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கிறது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அஜித், வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவின் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், நித்யா மேனனும் நடிக்க இருக்கின்றனர். கூடவே தம்பி ராமைய்யா, பால சரவணன் ஆகியோர்களும் நடிக்க இருக்கிறார்கள்.

ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தின் படத்தை தயாரிக்கிறார் ஏ.எம்.ரத்னம். மகன் பிறப்பு, மூக்கில் ஆபரேஷன் போன்ற காரணங்களால் இரண்டு மாதம் ஓய்வில் இருந்த அஜித் இப்போது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

அடுத்தமாதம், அதாவது அஜித்தின் பிறந்தநாள் முடித்த ஒருவாரம் கழித்து, மே 7ம் தேதி படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தொடர்ந்து இரண்டு-மூன்று மாதங்களுக்குள் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் சிவா. அதோடு படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டு தீபாவளி விருந்தாக, தீபாவளிக்கு இருதினங்களுக்கு முன்னதாக ஆரம்பம் படம் வெளிவந்தது. அதன்பின்னர் 2014ல் பொங்கல் விருந்தாக வீரம் படம் வெளியானது. இப்போது இந்தாண்டு தீபாவளிக்கு அஜித்தின் படம் வெளியாக இருக்கிறது. ஆக இந்தாண்டு அஜித்தின் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான்...!


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?
சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன? - வெளிவந்த உண்மை.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions