பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வேதாளம்..! ரிலீஸ் தேதி மாற்றம்?

Bookmark and Share

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வேதாளம்..! ரிலீஸ் தேதி மாற்றம்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் வேதாளம். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் 10ம் தேதி தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். படம் ரிலீஸ்யை முன்னிட்டு திரையரங்குகளை இப்போதே பேனர், கட்அவுட் போஸ்டர்கள் என அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டனர் தல ரசிகர்கள்.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பை நவம்பர் 10ம் தேதி வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதவாது நாகர்ஜுனா மகன் நடிப்பில் உருவான ‘அகில்’ திரைப்படம் மிக பிரம்மாண்டமாக ஆந்திரா முழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள ‘பிரேம் ராடன் தன் பயோ’ என்ற படமும் ஆந்திராவில் உள்ள முக்கிய தியேட்டர்களை கைப்பற்றியுள்ளது.

இதனால் அஜித்தின் வேதாளம் படத்தை தெலுங்கில் வெளியிட தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் வேதாளம் படம் தெலுங்கு ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறுகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions