விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விவேகம் படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் மூலமாக அஜித் நான்காவது முறையாக சிவாவுடன் இணைந்துள்ளார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என இவர்களின் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

அதேபோல் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா கமிட்டாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக செய்திகள் வெளியாகி விட்டன, இது ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

விஸ்வாசம் படத்தின் மூலம் நயன்தாராவும் அஜித்துடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஏகன், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இதனால் ரசிகர்களிடம் படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions