இணையதளத்தில் வெளி வந்த வேதாளம் பட காட்சிகள், உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

இணையதளத்தில் வெளி வந்த வேதாளம் பட காட்சிகள், உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்

தீபாவளிக்கு 'வேதாளம்' படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், சில விஷமிகள் படத்தின் சில நொடிக் காட்சிகளை படக்குழுவிற்கு தெரியாமல் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ நேற்று பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் என வைரலாக பரவ ஆரம்பித்தது. இச்சம்பவம் அஜித் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே புலி படத்தின் டீசரை ஒருவர் இப்படி வெளியிட்டது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்த, அதைத் தொடர்ந்து அஜித் படத்திற்கு இப்படி நடந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions