அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?

Bookmark and Share

அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?

அஜித், நயன்தாராவுடன் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம் என மூன்று படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களிலும் இவர்களது கூட்டணி ரசிகர்களால் மிகவும் அதிகமாக வரவேற்கப்பட்டது.

தற்போது நயன்தாரா ஜோடியாக நடிப்பதை தாண்டி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்து இவரது நடிப்பில் அறம் என்ற படம் வெளியாக இருக்கிறது. நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு நயன்தாராவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார். இதே நாளில் தான் 2015ம் ஆண்டு அஜித் நடித்த வேதாளம் படம் வெளியாகி இருந்தது. அப்படம் வசூலில் கலக்கியது போல் இப்படமும் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions