காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?

Bookmark and Share

காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா?

தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக இருக்கும் காவிரி, ஸ்டெர்லைட் போன்றவற்றில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடிகர் சங்கமும் போராட்டம் நடத்தியது

இந்த போராட்டத்தில் முதல் ஆளாக தளபதி விஜய் கலந்து கொண்டார், ஆனால் கடைசி ஆளாக கூட தல அஜித் போராட்ட களத்தின் பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.

இது அவரது ரசிகர்கள் ஒரு சிலருக்கே கூட கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அது என்னெவென்றால் அஜித்திற்கு பேசாமல் நடத்திய போராட்டத்தில் உடன்பாடில்லை. எதையும் நேருக்கு நேராக பேசி தீர்க்க வேண்டும் என நினைப்பவர் தல அஜித். இதனால் தான் இந்த போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கலைஞர் ஆட்சியின் போது பொது மேடையிலேயே தன்னை வலுக்கட்டாயமாக வரவைத்ததாக கூறி இருந்தார். இவரது இந்த பேச்சிற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டியதும் குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions