சிங்கப்பூர் தல ரசிகர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Bookmark and Share

சிங்கப்பூர் தல ரசிகர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் "தல 57" படத்தின் பாடல்கள் சிங்கப்பூரில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீரம்,வேதாளம் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார்,சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படம் “தல-57”.

வேதாளம் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால்,படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்னோட்டமாக படத்தின் ஒரு பாடலை மட்டும்,சிங்கப்பூரின் டின்செல் நகரில் நடைபெற உள்ள அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தல -57 படத்தில் பிரபல தமிழ் ராப் பாடகர் யோகி பாடியுள்ள பாடல் சிங்கப்பூரில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல்களை தல 57 படக்குழு,தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.


Post your comment





Related News
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions