
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் ரோபோ சங்க ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். அஜித்துடன் முதல் முதலாக சேர்ந்து நடிக்க உள்ளார் ரோபோ ஷங்கர். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் பல தகவல்களை பகிர்நது கொண்டுள்ளார்.
அதாவது, அஜித்துடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. மாறி படத்திற்கு பிறகு மிக பெரிய படத்தில் நடிக்க உள்ளேன். இந்த படத்திற்காக 50 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளேன். அஜித்தை பார்த்து அவருடன் செல்ஃபி எடுத்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஷூட்டிங்கின் முதல் நாளுக்காக ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். வாழ்த்துக்கள் ஷங்கர்.
Post your comment
Related News | |
![]() |