அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கை கோர்க்கும் சிம்பு - ரசிகர்கள் உற்சாகம்.!

Bookmark and Share

அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கை கோர்க்கும் சிம்பு - ரசிகர்கள் உற்சாகம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவிற்கு அவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படம் மிக பெரிய சறுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

பின்னர் மணிரத்தினம் படத்தில் நடிக்க கமிட்டானதால் மீண்டும் பழைய இடத்தை பிடித்து விடுவார் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் தற்போது தல அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சரண் உடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் வைரலாகத் தொடங்கியுள்ளது.

 இயக்குனர் சரண் சமீபத்தில் சிம்புவிற்கு இந்த படத்தின் கதையை கூறியதாகவும் தற்போது இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது, இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions