பல கோடிக்கு விலைபோன தல 56 ஆடியோ ரைட்ஸ்

Bookmark and Share

பல கோடிக்கு விலைபோன தல 56 ஆடியோ ரைட்ஸ்

என்னை அறிந்தால் படத்தை அடுத்து தல 56 படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள்தான் நடைபெற்றுள்ளன. அதற்குள் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

அஜித்தின்  பில்லா-2 ஆரம்பம் என்னை அறிந்தால்' ஆகிய படங்களின் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி நிறுவனம், இந்தப் படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்கி உள்ளது.  

அஜித் நடித்த பில்லா-2 ஆரம்பம் ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.  என்னை அறிந்தால் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.  

தற்போது அஜித் நடித்து வரும் படத்திற்கு முதன்முறையாக அனிருத் இசை அமைக்கிறார்.  வரிசையாக பல ஹிட் பாடல்களை தந்துள்ள அனிருத்தும், அஜித்தும் முதன் முதலாக தல 56 படத்தில் இணைவதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இப்படத்தின் ஆடியோ பெரிய அளவில் விலைபோகும் பாடல்களும் ஹிட்டாகும் என்ற கணிப்பில் பல கோடி கொடுத்து இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கி உள்ளது. தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.! November 6, 2017
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
அதிர வைக்கும் அஜித்தின் அடுத்த பட சம்பளம்!
மீண்டும் பழைய டீமுடன் இணையும் தல அஜீத்
இணையத்தில் லீக்கான தல56ன் ‘கெத்த விடாத கெத்த விடாத..’ பாடல் வீடியோ
தல56 ஃபர்ஸ்ட் லுக் வெளியான 10நிமிடத்திலேயே திரையுலகையே ஆச்சரியப்பட வைத்த அஜித் ரசிகர்கள்
இந்த தீபாவளி “தல தீபாவளி”
தல-56 புதிய சாதனை
தல56 பற்றிய டுவிட்டால் இயக்குனர் சிவாவிடம் திட்டுவாங்கிய ரோபோ ஷங்கர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions