எல்லாம் கடவுள் கையில் - அஜித்

Bookmark and Share

எல்லாம் கடவுள் கையில் - அஜித்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது.

இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது:-

எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பினோம். படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் இதை எதிர்பார்க்கவில்லை, அஜித் சாருடைய படங்களில் இது பெஸ்ட் என்று சொல்றாங்க. எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. 

படம் வெளியான அன்று காலையில் அஜித் சாருக்கு போன் பண்ணி, ‘அனைத்து ஊர்களிலிருந்து வரும் ரிப்போர்ட் ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு சார். உங்களுடைய நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்’ என்றேன்.

அதற்கு ‘அனைத்துமே கடவுள் கையில் தான் இருக்கிறது’ என்றார். அவர் ரொம்ப கடினமாக உழைக்கும் மனிதர். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும்’.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா? அனுஷ்கா இல்லையா? - லேட்டஸ்ட் அப்டேட்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
விஸ்வாசம் படத்தின் பட்ஜெட், பாடல்கள், அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல் - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions