மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்

Bookmark and Share

மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்

சினிமாவில் பேபி ஷாலினி என்றால் அப்போதே அனைவருக்கும் அத்துபடி. பலரும் அறிந்த குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர். ஷாலினி குமார், ஷாலினி அஜித் என அழைக்கப்படும் இவருக்கு நவம்பர் 20 இல் பிறந்தநாள்.

அஜித் ரசிகர்களை பொறுத்துவரை இவர் அண்ணி. இவரை பற்றிய சில சுவாரசியமான விசயங்கள் இங்கே. பேபி ஷாலினியை அடையாளம் காட்டியது மலையாளத்தில் வந்த எண்டே மாமாட்டிகுட்டியம்மாக்கு. இதனை தொடர்ந்து 26 படங்களில் குழந்தையாகவே நடித்துள்ளார்.

பின் தமிழில் 1984 ல் ஓசை படத்தில் எண்ட்ரியை தொடர்ந்து 10 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடத்தில் ஒரு படத்தில் மட்டும் தான். 4 வயதில் நடிக்க ஆரம்பித்தவர் 1983 முதல் 2001 வரை மிகவும் பிசியாகிவிட்டார்.

1985 இல் பிள்ளை நிலா, விடுதலை என இரு படங்களில் மட்டுமே ஷாலினி என்ற பெயர் தான். இளையதளபதி விஜய்க்கு காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோயின். கண்ணுக்குள் நிலவு படத்திலும் இந்த ஜோடி தொடர்ந்தது.

அஜித்க்கு பிரியமான மனைவியாக இருக்கும் ஷாலினி அமர்க்களம் படத்தில் தான் அவருக்கு ஜோடியானார். பின் மாதவனோடு அலைபாயுதே, பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் படத்தில் நடித்திருந்தார்.

அமர்க்களம் படத்தில் மலர்ந்த அவர்களின் காதல் இருவீட்டார் சம்மதிக்க 2000 ஆண்டில் ஏப்ரல் மாதம் சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். அஜித்தின் வெற்றிக்கு பின்னால் ஷானிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

தற்போது அஜித், அனோஷ்கா, ஆத்விக் என தன் குடும்ப பணிகள் சரியாக இருக்கிறது. இதற்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்றுள்ள ஷாலினிக்கு அஜித் கொடுத்த பரிசு சென்னை திருவான்மியூர் வீட்டில் ஒரு பேட்மிட்டன் ஆடுகளம்.

வீட்டில் அதற்கான பணிகள் முடிந்த பிறகு சமீபத்தில் தான் மீண்டும் குடியேறினார்கள். ஷாலினியின் புன்னைகை போல என்றும் தொடர சினிஉலகம் அவருக்கு மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறது.


Post your comment

Related News
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions