அஜித் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் மெகா ஹிட் நடிகரின் மகன் - புலம்பும் படக்குழு.!

Bookmark and Share

அஜித் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் மெகா ஹிட் நடிகரின் மகன் - புலம்பும் படக்குழு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன் விளங்கி வருபவர் தல அஜித், இவருடைய உதவும் மனபான்மை, மாஸ் க்ளாஸான ஸ்டைல் போன்றவை பலரையும் கவரும் வகையில் இருக்கும்.

இவருடைய ஸ்டைலை அப்படியே பின்பற்றும் சில பிரபலங்களும் உள்ளனர். அஜித் மிக பெரிய நடிகராக விளங்கி வந்தாலும் அவர் எந்தவொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஜெய் அஜித்தை போல இருக்க ஆசைப்பட்டு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுக்கிறார் என குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் மோகன் லாலின் மகன் பிரணவ் ஆதி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

ஆனால் இவரும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம், இதனால் படக்குழுவினர் இவர் என்ன அஜித்தின் ஸ்டைலை பின்பற்றுகிறாரா? என புலம்பி வருகின்றனர். ஆதி படம் நாளை திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions