அஜித் படத்தை ஒதுக்கிவிட்டு அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

அஜித் படத்தை ஒதுக்கிவிட்டு அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு!

எண்ணற்ற பல வெற்றிப் படங்களை ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக தயாரித்து இயக்கி நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்முறையாக ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

“காதலின் பொன் வீதியில்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். சந்தன், ஐஸ்வர்யா அர்ஜுன் இவர்களுடன் இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, “மொட்டை” ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் 22 முதல் சென்னையில் துவங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெற்று பின்னர் ஹய்திராபாத், டெல்லி, மூம்பை, தர்மசாலா, லடாக் பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தை இயக்குவதற்காக ‘தல 57’ படத்தில் நடிக்கவந்த வாய்ப்பை அர்ஜுன் ஒதுக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions