தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?

Bookmark and Share

தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?

தல அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓப்ராய், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிப்பில் நடிப்பிலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது விவேகம் படம்.

தமிழகத்தில் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது, வெளிநாடுகளில் வேற லெவலில் வேட்டையாடியது என பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட செய்திருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் அஜித்தின் விவேகம் படம் ரூ 10 கோடியை தாண்டி வசூல் செய்ததது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அந்த இடங்கள் சென்னை, கோவை, மதுரை மற்றும் செங்கல்பட்டு என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் வசூல் ரூ 70 கோடியை தாண்டி இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions