விஸ்வாசம் டைட்டில் எங்கிருந்து வந்தது தெரியுமா?- அஜித் ரசிகர்களின் ஆராய்ச்சி முடிவு.!

Bookmark and Share

விஸ்வாசம் டைட்டில் எங்கிருந்து வந்தது தெரியுமா?- அஜித் ரசிகர்களின் ஆராய்ச்சி முடிவு.!

தல அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார், மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு விஸ்வாசம் என இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி தொடர்ந்து ட்ரெண்டில் இருந்து வருகிறது.

இதனையடுத்து தல ரசிகர்கள் பி.எச்.டி அளவிற்கு ஆராய்ச்சி செய்து இந்த டைட்டில் எங்கிருந்து வந்தது என்று கண்டு பிடித்து கூறி வருகின்றனர்.

ஆம், தல அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த என்னை அறிந்தால் படத்தில் ஒரு இடத்தில் தல அஜித் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்த வில்லனை நோக்கி அஜித் பேசும் வசனத்தில் தான் இந்த 'விசுவாசம்' வருகிறதாம். 'என் கூட வேலை செய்றவங்களுக்கு நான் இருக்கும் போதே புரோமோஷன் கிடைக்கும், விசுவாசமா வேலை செய்றாங்க' என்று அஜித் ஒரு வசனம் பேசியிருப்பார்.

 படத்தில் இருந்து இந்த சீனை மட்டும் கட் செய்து தல ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions