தயாரிப்பாளர் சங்க அறிவிப்புக்கு மாறாக நடைபெறும் தல 56 படப்பிடிப்பு

Bookmark and Share

தயாரிப்பாளர் சங்க அறிவிப்புக்கு மாறாக நடைபெறும் தல 56 படப்பிடிப்பு

சினிமா உலகில் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகள் அதிகநாட்கள் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, யார் கட்டுப்பாட்டை விதிக்கிறார்களோ... அவர்களே சில நாட்கள் கழித்து அந்தக்கட்டுப்பாட்டை மீறிவிடுகிறார்கள்.

அதனால் சினிமா உலகில் உள்ள அமைப்புகள் அறிவிக்கும் கட்டுப்பாடுகளை யாருமே மதிப்பதில்லை. குறிப்பாக முன்னணி தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்கள் சட்டை பண்ணுவதில்லை.

அண்மையில் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. மறைந்த அன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சி.வி.குமார் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இறைவி படத்தின் படப்பிடிப்பு கனஜோராக நடைபெற்றது.

அதன் பிறகு இப்றாகிம் ராவுத்தர் இறந்த அன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைக்கும் இறைவி படப்பிடிப்பு ரத்து செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனை காரணமாக வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம். அவர்களது அறிவிப்பின்படி எந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாது.

ஆனால் வீரம் சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வரும் தல 56 படத்தின் படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்றைக்கு அப்துல்கலாம் இறப்பை ஒட்டி படப்பிடிப்பு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தல 56 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
பிரபல தொலைக்காட்சியில் ஒரே மேடையில் தல தளபதி - ஆரவாரத்தால் அதிர்ந்த அரங்கம்.!
பிரபல தொலைக்காட்சியில் ஒரே மேடையில் தல தளபதி - ஆரவாரத்தால் அதிர்ந்த அரங்கம்.!
ஆரம்பம் படத்தில் அஜித் கேட்டும் பிரபல நடிகரை நிராகரித்த இயக்குனர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
பொது நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய தல தளபதி - அதிர்ந்து போன அரங்கம்.!
ச்சே.. இதுக்கா இப்படி? தல தளபதி நாயகியின் மீது செருப்பு வீச்சு - அதிர்ச்சியாக்கும் தகவல்.!
கோவையின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions