இன்று இரவு நடக்கபோகும் தல தளபதி போர்!

Bookmark and Share

இன்று இரவு நடக்கபோகும் தல தளபதி போர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் தல56. இந்தப் படத்தின் தலைப்பு விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர்.

ஆனால் கபாலி ஃபர்ஸ்ட் லுக், தூங்காவனம் டிரெய்லர் என திருநாள் ஃபர்ஸ்ட் லுக் தொடர்ந்து வெளியாக அஜித் படம் குறித்த செய்திகள் வெளியாகாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இறுதியாக இன்று நள்ளிரவு 12மணிக்கு அஜித்தின் 56வது படத்தின் தலைப்பு வெளியாக இருக்கிறது. மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு புலி படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாக இருக்கிறது. 

இதனால் இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. சென்ற வியாழன் ரஜினியும் கமலும் இணையத்தை கலக்கினார்கள். இந்த வாரம் தல, தளபதி இருவரும் ட்ரெண்டாக்க போகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions