தல தளபதியை மோதிவிட்டுள்ள இயக்குனர் சாமி

Bookmark and Share

தல தளபதியை மோதிவிட்டுள்ள இயக்குனர் சாமி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  சார்பில்  கங்காரு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சாமி இயக்கியுள்ளார்.  

அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின்  தங்கையாக   ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக  வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார்.  தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்  இயக்குனர் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார்.   ஒளிப்பதிவு ராஜரத்னம் செய்துள்ளார். 

கங்காரு படத்தில் அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை வைத்துள்ளார் சாமி. படத்தில் பிரியங்கா தல ரசிகையாகவும், வர்ஷா விஜய்யின் ரசிகையாகவும் வருகிறார்கள்.

இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக்கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார்.

இப்படியாக இவர்களின் சண்டை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு நீளும். படத்தில் தல ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும்  காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படம் ஏப்ரல் பத்தாம் தேதி 150 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. 

 படம் பார்த்து தியேட்டரில் தலை ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் மோதிக்கொள்ளாமல் இருந்தால் சரி. 


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
பொது நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய தல தளபதி - அதிர்ந்து போன அரங்கம்.!
கோவையின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!
கேரளாவின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் லிஸ்ட் உள்ளே.!
இவ்வருடம் தோல்வியை தழுவிய படங்களில் தல தளபதி படங்களா? - அதிர்ச்சியூட்டும் லிஸ்ட்.!
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions