2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!

Bookmark and Share

2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்து மாஸான நடிகர் என்றால் அது தல தளபதி தான், இவர்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு உச்சகட்ட கொண்டாட்டம் தான்.

இந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் பைரவா மற்றும் மெர்சல் என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தன, அதே போல் தல அஜித் நடிப்பில் விவேகம் படம் மட்டுமே வெளியாகி இருந்தது.

இவ்வருடம் இவர்களில் வெற்றி வாகை சூடியது யார் என்ற பேச்சு இரு தரப்பு ரசிகர்களிடமும் இணையதளங்களில் காரசாரமாக அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

விஜயின் பைரவா படத்தில் சுவாரசியம் குறைவு என்பதால் எதிர்பார்த்த வசூலை படம் பெறவில்லை, பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது படம் சுமாரான வசூலை மட்டுமே பெற்றதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த விவேகம் படம் விஜயின் பைரவா பட சாதனைகளை நொறுக்கி ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது.

இதனையடுத்து மீண்டும் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படம் பிரம்மாண்ட வசூல் வேட்டையுடன் மெகா ஹிட் சாதனை படைத்தது.

உண்மையில் தல தளபதி விசியத்தை பொறுத்தவரை வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லவே இல்லை. இவர்கள் இருவருமே மாறி மாறி சாதனை படைத்து தொடர்ந்து வெற்றி கனியை சுவைத்து வரும் பாக்ஸ் ஆபீஸ் மன்னர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions