ஆபரேஷன் முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!

Bookmark and Share

ஆபரேஷன் முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!

அஜீத் ஆரம்பம் படத்தில் சண்டை காட்சியில் நடித்த போது அவரது காலில் அடிபட்டு தசை கிழிவு ஏற்பட்டது. அதை ஆபரேஷன் செய்து சரி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். என்றாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்ததால் ஆபரேஷன் செய்து கொள்ளாமலேயே நடித்து வந்தார்.

இந்த நிலையில் வேதாளம் படப்பிடிப்பின் போது, அஜீத்துக்கு திடீர் என்று கால் வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

வேதாளம் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆபரேஷன் செய்வது என்று முடிவு செய்திருந்தார். வெளிநாடு சென்று ஆபரேஷன் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜீத்துக்கு மீண்டும் கால்வலி அதிகமானது. இதையடுத்து சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு உடனடியாக காலில் ஆபரேஷன் நடந்தது.

ஏற்கனவே அஜீத்துக்கு ஆபரேஷன் செய்துள்ள கோவை டாக்டர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதையடுத்து அஜீத் முழுமையான குணம் அடைந்து ஆஸ்பத்திரியில் ஒரு நாள் தங்கி சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் அஜீத் தற்போது வீடு திரும்பியுள்ளார். அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. டாக்டர்கள் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கவும், தகுந்த ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஜீத் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் நடப்பது போன்று அனைத்து சிகிச்சைகளும் வீட்டில் இருந்தே நடந்து வருகிறது. தொடர்ந்து சிகிச்சை பெறுவதால் தானாக எழுந்து நடக்கும் வரை யாரும் தன்னை வந்து சந்தித்து உடல் நலம் விசாரிக்க வேண்டாம்.

இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் அஜீத் முழுமையாக குணம் அடைந்து நடப்பார் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions