தலைவா வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன்: ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்.

Bookmark and Share

தலைவா வெளிவராவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன்: ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்.

தலைவா திரைப்பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன். நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.

கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.

கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.

இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9–ந்தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.

ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.

இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும் திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளி வந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது. இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.

இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.

ஆகவே முதல்– அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் விக்ரம்
அஜித்தை உயர்ந்த உள்ளம் என பாரட்டிய பிரபல பத்திரிக்கை!
S3 முதல் நாள் தமிழக வசூல் எத்தனை கோடி தெரியுமா? முழு விவரம்
யார் கண் பட்டதோ- நண்பர்களுக்குள் இப்படி ஒரு விரிசலா?
ஏழாம் ஆண்டில் தமிழ் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
நானும் தமிழ் பொறுக்கிதான் - சு.சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்
ஜல்லிக்கட்டு வெற்றியின் அடையாளமாய் அனைவரும் இதை செய்யுங்கள் ! இளைஞர் புது யோசனை
மீடியா வெளிச்சமே இல்லாமல் நடந்த முதல் சினிமா போராட்டம்!#Jallikattu
நோ பிரஸ் மீட்ஸ், ஆடியோ ரிலீஸ், பட வெளியீடு... ஜல்லிக்கட்டுக்காக ஸ்தம்பித்தது திரையுலகம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions