முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?

Bookmark and Share

முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?

ரஜினிகாந்தின்  புதிய  படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவது உறுதியாகி உள்ளது. இவர் ரமணா, கஜினி, துப்பாக்கி, 7–ம் அறிவு, கத்தி, சர்கார் போன்ற படங்கள் எடுத்து முன்னணி இயக்குனராக இருக்கிறார்.

முந்தைய படங்களில் விவசாயிகள் பிரச்சினை, அரசியல்வாதிகளின் ஊழல், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை சொல்லி இருந்தார். ரஜினிகாந்த் படத்திலும் அரசியல் இருக்கும் என்றும், படத்துக்கு நாற்காலி என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாகவும் தகவல்கள் பரவின. 

இந்த நிலையில் படத்துக்கு நாற்காலி என்ற பெயர் வைக்கவில்லை என்று முருகதாஸ் மறுத்துள்ளார். புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ‘கொடி பறக்குது’ படத்தில் உதவி கமி‌ஷனராகவும், ‘பாண்டியன்’ படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், ‘மூன்று முகம்’ படத்தில் டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியனாகவும் நடித்து இருந்தார். 

‘பேட்ட’ படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. புதிய படத்திலும் அவரை இளமையாகவே காட்ட முருகதாஸ் திட்டமிட்டு உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions