ஷீரடி சாய்பாபாவாக நடிக்கும் தலைவாசல் விஜய்

Bookmark and Share

ஷீரடி சாய்பாபாவாக நடிக்கும் தலைவாசல் விஜய்

தமிழ் சினிமாவில் எந்த வித குணசித்திர வேடங்களிலும் நடிக்கும் சக்தி வாய்ந்தவர் தலைவாசல் விஜய். ஆனால் அவரை தமிழ் சினிமா ஆட்டோக்காரனாகவும், குடிகாரனாகவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டபோது மலையாள சினிமா ஸ்ரீ நாராயண குருவாக நடிக்க வைத்தது.

இதற்காக அவர் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை பெற்றார். தற்போது அவர் பகவான் ஷீரடி சாய்பாபாவாக நடிக்கிறார். அபூர்வ மகான் என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தை டி.என்.எஸ்.தேவர் பிலிம்ஸ் சார்பில் செல்லத்துரை, செல்வம் தயாரிக்கிறார்கள்.

ஷீரடி சாய்பாபாவின் வாழ்கையை காட்டும் இந்தப் படத்தில் தலைவாசல் விஜய்யுடன் நடிக்கிறார். இளம் நடிகர்கள் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கர், சுமன், டெல்லி கணேஷ், பிரேம், அஜய் ரத்னம், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வி.தஷி இசை அமைக்கிறார், ஜி.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். "பாபாவின் மகிமையைச் சொல்லும் படம். அவரது வாழ்க்கையும், இன்றைய வாழ்க்கை சூழுலையும் இணைத்து சொல்லப்படும் கதை. இன்றைய இளைஞர்கள் பாபா வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.

அதைக் காட்டும் படம்தான் இது. பாபாவின் அருள் முகத்தோடு இருக்கும் ஒரே நடிகர் தலைவாசல் விஜய். அவரை பாபாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது என்ன சம்பளம் எத்தனை நாள் ஷ¨ட்டிங் என்று எதுவும் கேட்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்" என்றார் இயக்குனர் கே.ஆர்.மணிமுத்து.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions