மெர்சல் பேனர் கட்டமுயன்ற போது விஜய் ரசிகர் உயிரிழந்தார்!

Bookmark and Share

மெர்சல் பேனர் கட்டமுயன்ற போது விஜய் ரசிகர் உயிரிழந்தார்!

இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் மெர்சல். இதனையொட்டி திரையரங்குகளில் அதிக அளவில் விஜய்யின் கட் அவுட் வைத்து வந்தனர்.

இந்த நேரத்தில் தான் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி , காஞ்சிபுரத்தில் வாலாஜாபாத்தில் சிலர் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெர்சல் படத்தின் பேனரை 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் சுவரின் மீது ஏறி நின்று பேனரை கட்டியுள்ளனர்.

அப்போது சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததால், எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பேனர் கலாச்சாரத்தில் ஒவ்வொரு முன்னணி நடிகர்கள் படம் வரும்போது ரசிகர்கள் தங்கள் அறியாமல் உயிரை பணயம் வைத்து ஏதாவது செய்வது கண்டிக்கத்தக்கது.

இதனை அந்த முன்னணி நடிகர்கள் தான் எனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று தடுக்க வேண்டும், நடிகர்கள் சொல்வார்களா?. பார்ப்போம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions