பிறைசூடன் எழுதிய தளபதி பாட்டு!

Bookmark and Share

பிறைசூடன் எழுதிய தளபதி பாட்டு!

ரஜினிக்காக ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா -என்ற ஹிட் பாடலை இளையராஜாவின் இசையில் எழுதி பிரபலமானவர் கவிஞர் பிறைசூடன். அதையடுத்து ஏராளமான படங்களில் நேரடியாக பாடல்கள் எழுதி வந்த அவர், சமீபகாலமாக டப்பிங் படங்களுக்கு அதிகப்படியான பாடல்களை எழுதி வருகிறார்.

இந்த நிலையில், விரைவில் திமுக கட்சியின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினைப்பற்றி உருவாக்கப்பட்டுள்ள தளபதி -என்ற வீடியோ கேசட்டிற்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

தளபதி தளபதி தமிழின தளபதி என்று தொடங்கும் அந்த பாடல் ஆடியோ மட்டுமின்றி வீடியோவிலும் வெளியாகிறது. மேலும், ஆதிஷ்உத்ரியன் இசையமைத்துள்ள இந்த தளபதி கேசட்டை, நடிகர் வாகை சந்திரசேகர் தயாரித்துள்ளார்.

இதை வருகிற ஏப்ரல் 4-ந்தேதி ஒரு பிரமாண்ட மேடையில் வெளியிடுகிறார்களாம். ஆக, இத்தனை காலமும் சினிமாவுக்கே பாடல் எழுதி வந்த பிறைசூடன் இந்த பாடல் மூலம் அரசியல் பாடலாசிரியராகவும் உருவெடுத்திருக்கிறார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
விஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! புகைப்படங்கள் இதோ
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions