அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்

Bookmark and Share

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்

விஜய் நடிப்பில் மெர்சல், சர்கார் திரைப்படங்கள் அடுத்தடுத்து இரண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமும் தீபாவளியைக் குறிவைத்து உருவாகி வருகிறது.

படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கெனவே ஆரம்பமான நிலையில் நேற்று முக்கிய பணி பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து கலை இயக்குநர் முத்துராஜ் ஒப்பந்தமாகி வருகிறார்.

‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் கலை இயக்கப் பணிகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய அவர், தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் கலை இயக்கப் பணியை தொடங்கி உள்ளார்.

ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் நேற்று சென்னை பின்னி மில்லில் படப்பிடிப்புக்காக அரங்கு அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இந்தத் தகவலை முத்துராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களுக்கும் முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசுவும் பணியாற்றுகின்றனர். விவேக் பாடல்களை எழுத, ரூபன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். 


Post your comment





Related News
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
விஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! புகைப்படங்கள் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions