
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலை படக்குழு படமாக்கியுள்ளது.
படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்படி, குழந்தைகளிடத்திலும் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதால், சுமார் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை விஜய்யின் அறிமுக பாடலில் ஆட வைக்க அட்லி முடிவு செய்தாராம்.
மேலும் அந்த பாடல் சிறப்பாக வந்திருப்பதாகவும், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, குழந்தைகளுடன் விஜய் சிறிது நேரத்தை செலவிட்டதாகவும், அவர்களுடன் செல்ஃபி எடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post your comment