வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது: தமன்னா

Bookmark and Share

வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது: தமன்னா

நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:-

“கதாநாயகிகளுக்கு முன்பெல்லாம் வயதை பார்த்தே பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதாநாயகர்களுக்கு வயதை பார்ப்பது இல்லை. 30 வயது நிரம்பிய கதாநாயகிகளுக்கும் 10 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கும் நடிகைகளுக்கும் குறிப்பிட்ட கதைகள் கிடைப்பது இல்லை. அவர்களை ஒதுக்கும் நிலையே இருந்தது.

ஆனால் இப்போது அந்த நிலைமைகளில் மாற்றம் வந்து இருக்கிறது. வயதை பொருட்படுத்துவது இல்லை. மூத்த நடிகர்களைப்போல் வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகின்றன. திருமணமான நடிகைகளுக்கும் படங்கள் குவிகிறது. இதற்கு உதாரணம் வட இந்திய நடிகைகள். அங்கு திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்

நான் 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இன்னும் எனது ‘மார்க்கெட்’ சரியவில்லை. பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த காலகட்டத்தில் நானும் சினிமாவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போதெல்லாம் டைரக்டர்களும் 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கான கதைகளையே தயார் செய்கிறார்கள்.

என்னிடம் உங்களின் வெற்றி ரகசியம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சினிமாவில் அறிமுகமான போது தென்னிந்திய மொழி படங்களில் நடித்தேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் எனக்கு தெரியாது. கலாசாரமும் வித்தியாசமாக இருந்தது. அப்போது நான் பயந்து இருந்தால் சினிமாவில் நடித்து இருக்கவே முடியாது.
எதையும் சந்திக்கலாம் என்ற தைரியத்தில் நடிக்க வந்தேன்.

அந்த துணிச்சல்தான் என்னை இந்த உயரத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது. அதுதான் எனது வெற்றியின் ரகசியமாகவும் இருக்கிறது.”
இவ்வாறு தமன்னா கூறினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions