சிக்கலில் சீக்கிய இசையமைப்பாளர் தமன்

Bookmark and Share

சிக்கலில் சீக்கிய  இசையமைப்பாளர் தமன்

2015 ஆம் ஆண்டில் தெலுங்கு மற்றும் தமிழில் பனிரெண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் எஸ்.எஸ்.தமன். இவற்றில் பாலகிருஷ்ணா, ரவிதேஜா போன்ற முன்னணி தெலுங்குநடிகர்கள் படங்களும், தமிழில் வாலு, சகலகலாவல்லவன் போன்ற படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

நிறையப்படங்கள் அதிலும் பட்ஜெட் பற்றிக் கவலைப்படாத பெரியஹீரோக்கள் படங்களில் பணியாற்றியிருந்தாலும், அவரிடம் பணியாற்றிய இசைக்கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு அதனால், ஒரு சிக்கலில் மாட்டி மீண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம். 

இசைக்கலைஞர்கள் சங்கத்திலிருந்து அவர்களுடைய உறுப்பினர்களுக்குப் போன ஒரு குறுஞ்செய்தியில், தமனிடம் பணியாற்றிய பல இசைக்கலைஞர்களுக்கு அவர் ஊதியம் கொடுக்கவில்லை எனவே மறுஅறிவிப்பு வருகிறவரை அவருக்கு யாரும் வேலை செய்யவேண்டாம் என்று சொல்லப்பட்டிருந்ததாம்.

இந்த விசயம் தெரிந்தவுடன் பதறிப்போன தமன், உடனடியாக சம்பளபாக்கிகளைச் செட்டில் செய்துவிட்டாராம். 

அதன்பின்னர் மீண்டும் அவர் படங்களில் பணியாற்றத்தடையில்லை என்று சங்கம் அறிவித்திருக்கிறதாம். பரபரப்பாக வேலைகள் செய்துகொண்டிருக்கும் தமன் சம்பள விசயத்தில் இவ்வாறு நடந்துகொண்டது திரையுலகினரிடையே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 


Post your comment





Related News
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா
பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை
இயக்குனர் கௌதமன் கைது! மீண்டும் பரபரப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்
காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions