'மாஸ்' - தமனும் இல்லை, தமன்னாவும் இல்லை...!

Bookmark and Share

'மாஸ்' - தமனும் இல்லை, தமன்னாவும் இல்லை...!

'மாஸ்' படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என கடந்த சில நாட்களாக சில மீடியாக்களில் செய்திகள் வந்தன. ஆனால், தமன்னா எங்களது படப்பிடிப்புத் தளம் பக்கமே வரவில்லை என அடித்துச் சொல்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் அப்படி வந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை என்றார் . எங்களது படத்தில் தமனும் இல்லை. தமன் ஆர்க்கெஸ்ட்ரேஷன் அமைத்த பாடல் ஒன்றை படமாக்கினோம்.

ஆனால், படத்தின் வேகத்திற்கு அந்தப் பாடல் இடைஞ்சலாக இருக்கும் என்று கருதியதால் அந்தப் பாடலை இந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை. கண்டிப்பாக அடுத்தப் படத்தில் அந்தப் பாடலை பயன்படுத்துவேன் என்று வெங்கட் பிரபு அழுத்திச் சொன்னார்.

அப்போது பக்கத்தில் எந்த சலனமும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார் படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. யுவன் இசையமைத்த ஒரு குத்துப் பாடல் திருப்தியாக இல்லையென சூர்யா சொன்னதால்,  தமன் இசையைமத்த ஒரு பாடலைப் படமாக்கினார்கள்.

அதைப் பற்றிக் கேள்விப்பட்ட யுவன்ஷங்கர் ராஜா, தொடர்ந்து படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். அதன் பிறகு சில சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.

'மாஸ்' படத்தின் இசையமைப்பாளர் யுவன்தான் என வெங்கட்பிரபுவே அறிவித்தார். இப்போது 'மாஸ்' படத்தில் தமன் இசையமைத்த பாடலை முழுவதுமாகவே நீக்கி விட்டார்கள்.

யுவன் கோபப்பட்டதுதான் இதற்குப் பின்னணி என்கிறார்கள். ஆனாலும், 'மாஸ்' படத்தின் பாடல்கள் தற்போது ஹிட்டாகி வருகின்றன. அதே சமயம், 'மாஸ்' படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலை தனது அடுத்த படத்திற்கு பயன்படுத்துவதாக வெங்கட் பிரபு அறிவித்தது தமனையும் சமாதானப்படுத்தவே என்கிறார்கள்.

இந்தப் படத்தின் பாடலை எப்படி வேறொரு படத்திற்குப் பயன்படுத்த முடியும் ?. அது வெங்கட்பிரபுவுக்கே வெளிச்சம்.


Post your comment





Related News
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா
பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை
இயக்குனர் கௌதமன் கைது! மீண்டும் பரபரப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்
காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions