தமன் இசையில் பாட்டு பாடிய இமான்

Bookmark and Share

தமன் இசையில் பாட்டு பாடிய இமான்

ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் பாடுவது தமிழ் திரையுலகில் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது தமன் இசையமைத்து வரும் ‘அப்பாடக்கர்’ படத்திற்கு இமான் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்து வரும் படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இமான் ‘புஜ்ஜிமா...’ என்ற பாடலை பாடியிருக்கிறார். இதற்கு நா.முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.

ஏற்கனவே சிம்பு மற்றும் சுவாதி ஆகியோர் இப்படத்தில் இடம் பெறும் டூயட் பாடலை பாடியிருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions