12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா

Bookmark and Share

12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா

சென்னை: தமன்னா நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. 16 வயதில் நடிகையானவர் தமன்னா. 2005ம் ஆண்டு வெளியான சாந்த் சா ரோஷன் செஹரா என்ற இந்தி படம் மூலம் அவர் ஹீரோயின் ஆனார். கேடி படம் மூலம் கோலிவுட் வந்தார். கல்லூரி படம் அவரை பலருக்கும் அடையாளம் காட்டியது.

கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் அவர் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் கார்த்திக்கு பொருத்தமான ஜோடி என்று பேசப்பட்டவர் தமன்னா.பாலிவுட்டில் அறிமுகமானாலும் அவரை வளர்த்துவிட்டது கோலிவுட்டும், டோலிவுட்டும் தான்.

பல காலம் கழித்து மீண்டும் பாலிவுட் சென்ற அவரை பார்த்து நடிகர் ரித்திக் ரோஷன் பார்பி பொம்மை என்று கூற பிற நடிகைகளுக்கு காதில் புகை வந்தது.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி உலக அளவில் ரூ. 1, 500 கோடி வசூல் செய்துள்ள பாகுபலி 2 படத்தில் அவந்திகாவாக நடித்திருந்தார் தமன்னா.

இந்த படத்தில் நடித்ததை பாக்கியமாக கருதுகிறார் அவர்.தமன்னா நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். நயன்தாரா, த்ரிஷாவை அடுத்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஹீரோயினாக நடித்து வரும் நடிகையாகியுள்ளார் தமன்னா.

சீனியராகியுள்ள நிலையில் நயன்தாரா, த்ரிஷா போன்று ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை
சிம்புவுக்கு ஜோடியான தமன்னா
நயன்தாரா வழியை பின்பற்றும் தமன்னா!
பேசுவதற்கு முன்பு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் – தமன்னா ஆவேசம்!
கவர்ச்சியால் மட்டும் சினிமாவில் நீடிக்க முடியாது: தமன்னா பேட்டி
திறமையான நாயகிகளை பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா பேட்டி
அனுஷ்கா போல எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடிக்க அவசியம் இல்லை - தமன்னா
தமன்னாக்கு அண்ணனாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர்!
சோகமான படங்களில் நடிக்க மாட்டேன்: தமன்னா பேட்டி
மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions