தமன்னாவின் பாகுபாலி பில்டப்!

Bookmark and Share

தமன்னாவின் பாகுபாலி பில்டப்!

தாய்மொழியான இந்தி சினிமாவில் கொடிநாட்டப் போவதாக சொல்லிக்கொண்டு போன தமன்னாவுக்கு அங்கு நடித்த படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியை கொடுத்ததால், மறுபடியும் தென்னிந்திய சினிமாவை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் ரிட்டர்ன் ஆனபோதுதான், அவருக்கு அஜித்தின் வீரம் பட வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் கிடைத்தபோது, தெலுங்கில் ராஜமவுலியின் பாகுபாலி படம் கிடைத்தது. பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள அந்த படத்தில் முதலில் கமிட்டானவர் அனுஷ்காதான்.

அதனால் செகண்ட் ஹீரோயினி போன்றொரு வேடத்துக்குத்தான் தமன்னா கமிட்டானார். இருப்பினும், பின்னர் அவர் நடித்த அவந்திகா என்ற கேரக்டர் கதைக்கு முக்கியத்துவமானதாக மாற்றப்பட்டதால் உற்சாகமடைந்தார் தமன்னா.

மேலும், ராஜமவுலி படங்களில் பிரமாண்டமான படம் என்பதால், அந்த படத்துக்கு கேட்கும்போதெல்லாம் கால்சீட் கொடுக்க முன்வந்ததால் தமன்னாவின் கேரக்டரை தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்திக்கொண்டார் ராஜமவுலி.

விளைவு, விரைவில் வெளியாகயிருக்கும் பாகுபாலி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாவதால் செம உற்சாகத்தில் காணப்படும் தமன்னா, என்னை அழகாக வெளிப்படுத்தும் அவந்திகா கேரக்டரில் நான் இதுவரையில்லாத அளவுக்கு நடித்திருக்கிறேன்.

பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள அந்த படத்தில் நானும் ஜொலித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. குறிப்பாக, பாகுபாலியில் நான் நடித்துள்ள அவந்திகா வேடத்தை என்னால் காலத்துக்கும் மறக்க முடியாது என்றும் பெரிய பில்டப்பெல்லாம் கொடுத்து வருகிறார் தமன்னா.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions